சாக்லெட்டுகளைப் பிடிக்காதவர்கள் வெகு சிலரே. பிடிப்பவர்கள் உலகம் முழுக்க நிரம்பியிருக்கிறார்கள். சாக்லெட் பிடித்தவர்கள், பிடிக்காதவர்கள், அதிகம் விரும்பாதவர்கள் என பல தரப்பினரும் ஒரே சாக்லெட்டை பகிர்ந்து கொள்ளும் போது எந்த பிரச்னையும் வராமல் இருக்க புதிய திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
டிவிட்டரில் ஒரு சாக்லெட் பாக்கெட் பற்றிய தகவல் வைரலாகப் பரவி வருகிறது. அதில், சாக்லெட் பாருக்குள் எக்ஸ்எஸ், எக்ஸ்எல், எஸ், எல் என் விதவிதமான அளவுகளுடன் பார்கள் அமைந்துள்ளன.
இதையும் படிக்க.. மாணவி சத்யாவை கொன்றது ஏன்? சதீஷ் பரபரப்பு வாக்குமூலம்
கோட்டட் டேக்ஸ் என்ற பெயரிலான டிவிட்டர் பக்கத்தில் இந்த புகைப்படம் பகிரப்பட்டு பலராலும் கொண்டாடப்பட்டு வருகிறது.
பலருக்கும் பல விதமான விருப்பங்கள் இருக்கும். அப்படியிருக்க சாக்லெட் அளவுகள் மட்டும் ஏன் ஒன்றுபோல இருக்க வேண்டும். விருப்பங்களுக்கு ஏற்ப அளவுகளும் மாறினால் சாக்லெட்டுகளை பிரிக்கும் போது எந்த சண்டையும் சச்சரவும் வராமல் தடுக்கலாமே என்கிறார்கள் சாக்லெட் காதலர்கள்.
இது மிகவும் புது விதமான யோசனை என்று பலரும் கொண்டாடி வருகிறார்கள். எப்படி இருந்தாலும் ஒரு சாக்லேட் முழுவதையும் நானே சாப்பிட்டுவிடுவேன். அப்படியிருக்க இதெல்லாம் எதற்கு என்று சாக்லேட் விரும்பிகள் சிலரும் கருத்துகளை பதிவு செய்துள்ளனர்.
நன்றி : goated takes டிவிட்டர் பக்கம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.