குஜராத்தில் தொங்கு பாலம் அறுந்து விழுந்ததில் 60 பேர் பலி: முதல்வர் நேரில் ஆய்வு
மோர்பி: குஜராத்தின் மோர்பி நகரில், மச்சு ஆற்றின் மீது கட்டப்பட்ட தொங்கு பாலம் அறுந்து விழுந்ததில் 60 பேர் பலியான நிலையில் அம்மாநில முதல்வர் பூபேந்திர படேல் நேரில் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
மோர்பி: குஜராத்தின் மோர்பி நகரில், மச்சு ஆற்றின் மீது கட்டப்பட்டதொங்கு பாலம் அறுந்து விழுந்ததில் 60 பேர் பலியான நிலையில் அம்மாநில முதல்வர் பூபேந்திர படேல் நேரில் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
குஜராத்தின் மோர்பி பகுதியில் மச்சு ஆற்றின் குறுக்காக மக்கள் பயன்பாட்டிற்காக தொங்கு பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
வரலாற்று சிறப்பு மிக்க இந்த தொங்கு பாலம் பழுந்தடைந்த நிலையில், புனரமைக்கப்பட்டு கடந்த 26 ஆம் தேதி மீண்டும் மக்களின் பயன்பாட்டு வந்தது.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை தொங்கு பாலம் அறுந்து விழுந்து பயங்கர விபத்துக்குள்ளானது. இதில், இதுவரை 60 பேரின் உடல்கள் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளது.
பாலம் விபத்துக்குள்ளாவதற்கு முன்பு அதன் மீது 500 பேர் வரை நின்று கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அதில் 400க்கும் மேற்பட்டோர் பாலம் அறுந்து விழுந்ததில் ஆற்றில் மூழ்கினர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த பக்கத்தில் உள்ள பொதுமக்கள், தீயணைப்பு வீரர்கள், காவல்துறையினர் நீரில் மூழ்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மீட்புப் பணியில் தீயணைப்புத் துறையினர், மூன்று மாநிலங்களைச் சேர்ந்த பேரிடர் மீட்புக்குழுவினர் மற்றும் உள்ளூர் நீச்சல் வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் விபத்து நடந்த இடத்திற்கு நேரில் வருகை தந்த முதல்வர் பூபேந்திர படேல் மீட்பு பணிகள் குறித்து கேட்டறிந்தார்.
தொடர்ந்து அவர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் விபத்துக்குள்ளானவர்களின் உடல்நிலையைக் கேட்டறிந்தார்.
விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.