பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது கார் மோதியதில் 6 பேர் பலி; 7 பேர் படுகாயம்
குஜராத்தில் சாலையின் ஓரத்தில் நின்ற பக்தர்கள் மீது கார் மோதியதில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 7 பேர் படுகாயமடைந்தனர்.
குஜராத்தில் சாலையின் ஓரத்தில் நின்ற பக்தர்கள் மீது கார் மோதியதில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 7 பேர் படுகாயமடைந்தனர்.
குஜராத் மாநிலம் ஆரவல்லி மாவட்டத்தில் அம்பாஜி நோக்கி பக்தர்கள் பாதயாத்திரை சென்றுகொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த இன்னோவா கார் ஒன்று அங்கிருந்த பக்தர்கள் மீது மோதியது. இதில் பக்தர்கள் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும், 7 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இன்று காலை 7. 30 மணிக்கு இந்த விபத்து நடைபெற்றுள்ளதாகவும் இன்னோவா கார் டயர் வெடித்ததால் நிலை தடுமாறி பக்தர்கள் மீது மோதியதாகவும் கார் ஓட்டுநரிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும் காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.