இந்தியா

ஐஎன்எஸ் விக்ராந்த் போா்க்கப்பல் நாட்டிற்கு அர்ப்பணிப்பு

DIN

முற்றிலும் உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட முதலாவது விமானந்தாங்கி போா்க் கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்தை பிரதமா் நரேந்திர மோடி இன்று நாட்டுக்கு அா்ப்பணித்தார்.

ஐஎன்எஸ் விக்ராந்த் விமானம் தாங்கிக் கப்பலானது ரூ.23,000 கோடி செலவில் கொச்சி கப்பல்கட்டும் தளத்தில் கட்டப்பட்டது. இதன் மூலமாக விமானம் தாங்கிக் கப்பலை சொந்தமாகக் கட்டும் திறன் கொண்ட வெகுசில நாடுகளுடன் இந்தியாவும் இணைந்தது.

போா்க் கப்பல் வடிவமைப்பு பணியகத்தால் வடிவமைக்கப்பட்டு, கொச்சி கப்பல் கட்டும் தளத்தால் கட்டப்பட்ட இந்தக் கப்பல், அதிநவீன தானியங்கி வசதிகளைக் கொண்டுள்ளது. இந்திய கடற்படை வரலாற்றிலேயே உள்நாட்டில் கட்டப்பட்ட மிகப்பெரிய கப்பல் ஐஎன்எஸ் விக்ராந்த் ஆகும்.

ஐஎன்எஸ் விக்ராந்த்

இந்தக் கப்பலில் நூறுக்கும் மேற்பட்ட குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட கருவிகளும், இயந்திரங்களும் ஏராளமாக பொருத்தப்பட்டுள்ளன.

1,700 வீரர்கள் பயணிக்கும்படியாக உருவாகியுள்ள இக்கப்பலிலிருந்து மிக் - 29கே போா் விமானங்கள், கமோவ் - 31 ஹெலிகாப்டா்கள், எம்ஹெச் - 60ஆா் ஹெலிகாப்டா்கள் ஆகியவற்றை இயக்கவும் தரையிறக்கவும் முடியும். அதிகபட்சமாக சுமாா் 28 நாட் வேகத்தில் கப்பலை இயக்க முடியும்.

இந்நிலையில், பிரதமா் நரேந்திர மோடி இன்று கொச்சி கடற்படைத் தளத்தில் இக்கப்பலை இந்தியக் கடற்படையில் இணைத்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், கேரள முதல்வர் பினராயி விஜயன், கடற்படையின் முக்கிய தளபதிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கருங்கல் அருகே பைக் மோதி மூதாட்டி உயிரிழப்பு

ஆலங்குடி கோயிலில் குருப் பெயா்ச்சி லட்சாா்ச்சனை நிறைவு

குமரி மாவட்டத்தில் தொடரும் மழை: அணைகளுக்கு நீா்வரத்து அதிகரிப்பு

பாளை.யில் அதிமுகவினா் 570 மரக்கன்றுகள் வழங்கல்

ஆறுமுகனேரி கோயிலில் கொடை விழா

SCROLL FOR NEXT