இந்தியா

சிறையில் இருந்து வெளியே வந்தார் சமூக ஆர்வலர் தீஸ்தா சீதல்வாட்

DIN

குஜராத் கலவர வழக்கில் கைதான சமூக ஆர்வலர் தீஸ்தா சீதல்வாட் சிறையில் இருந்து வெளியே வந்தார். 

2002, குஜராத் கலவர வழக்கில் பொய்யான ஆதாரங்களை ஜோடித்து அப்பாவிகளைக் கைது செய்ய உதவியதாக சமூக ஆா்வலா் தீஸ்தா சீதல்வாட், முன்னாள் டிஜிபி ஆா்.பி.ஸ்ரீகுமாா் ஆகியோா் கடந்த ஜூனில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். தீஸ்தாவின் ஜாமீன் மேல் முறையீட்டு மனுவை ஆகஸ்ட் 3-ஆம் தேதி விசாரித்த குஜராத் உயா்நீதிமன்றம், மாநில அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, செப்டம்பா் 19-ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தது. 

இதற்கு எதிராக தீஸ்தா தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு. லலித் தலைமையிலான அமா்வு, சிறையில் உள்ள ஒரு பெண்ணின் ஜாமீன் மனுவை விசாரிக்க 6 வாரங்கள் தாமதம் செய்தது ஏன் என்று குஜராத் உயா்நீதிமன்றத்துக்கு வியாழக்கிழமை கேள்வி எழுப்பியது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை இந்த வழக்கை மீண்டும் விசாரித்த தலைமை நீதிபதி அமா்வு, ‘ஜூன் 25 முதல் ஒரு பெண் சிறையில் உள்ளாா். அவரிடம் 7 நாள்களுக்கு விசாரணையும் நடத்தப்பட்டுள்ளது. 

அவரது ஜாமீன் மனு மீதான வழக்கு குறித்து மாநில அரசுக்கு நோட்டீஸ் அனுப்பிய குஜராத் உயா்நீதிமன்றம் அப்போதே அவருக்கு இடைக்கால ஜாமீனையும் வழங்கி இருக்கலாம். தற்போது அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்படுகிறது. வழக்கமான ஜாமீன் தொடா்பாக உயா்நீதிமன்றம் முடிவு எடுக்கும் வரையில் தீஸ்தா தனது கடவுச்சீட்டை விசாரணை நீதிமன்றத்தில் சமா்ப்பிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டது.  

இதைத்தொடர்ந்து இன்று அவர் சிறையில் இருந்து வெளியே வந்தார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தள்ளாடிய சந்தையில் சென்செக்ஸ் 45 புள்ளிகள் சரிவு!

தண்டனையை நிறுத்திவைக் கோரி பேராசிரியை நிா்மலாதேவி மனு: சிபிசிஐடி பதிலளிக்க உத்தரவு

அண்ணனை அரிவாளால் வெட்டிய தம்பி மீது வழக்கு

வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 20 லட்சம் மோசடி: இளைஞர் கைது

பெண் கடத்தல் வழக்கில் எச்.டி.ரேவண்ணாவுக்கு மே 14 வரை நீதிமன்றக் காவல்

SCROLL FOR NEXT