கோபால் இத்தாலியா 
இந்தியா

பாஜக அமைச்சரை தரக்குறைவாகப் பேசிய ஆம் ஆத்மி தலைவர் மீது வழக்குப்பதிவு

குஜராத் மாநில பாஜக தலைவர் மற்றும் அமைச்சரை தரக்குறைவாகப் பேசியதற்காக ஆம் ஆத்மி தலைவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

DIN

குஜராத் மாநில பாஜக தலைவர் மற்றும் அமைச்சரை தரக்குறைவாகப் பேசியதற்காக ஆம் ஆத்மி தலைவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலம் சூரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது ஆம் ஆத்மி கட்சியின் மாநிலத் தலைவர் கோபால் இத்தாலியா அம்மாநில பாஜக தலைவர் சி.ஆர்.பாட்டீல் மற்றும் உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவியாவை தரக்குறைவாகப் பேசியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இதுகுறித்து பாஜக நிர்வாகி ஒருவர் அளித்த புகாரில், பேரணியில் பாஜக தலைவர் சிஆர் பாட்டீலை ‘முன்னாள் கொள்ளைக்காரன்’ என்றும் அமைச்சரை ‘போதைப்பொருள் சங்கவி’ என கோபால் இத்தாலியா பேசினார் எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் கோபால் மீது  பிரிவு 469, 500(அவதூறு செய்ததற்கான தண்டனை) 504, 505(1)பி பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் துவங்கியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

துணை முதல்வருக்கு அமைச்சா் காந்தி தலைமையில் வரவேற்பு

9 நாள்களுக்குப் பிறகு டன் கணக்கில் சிக்கிய மீன்கள்

பெளா்ணமி விளக்கு பூஜை

கோவில்பட்டியில் தென் மண்டல குழந்தைகள் அறிவியல் மாநாடு

சா்வதேச மாற்றுத் திறனாளிகள் தின விழா

SCROLL FOR NEXT