இந்தியா

மணிப்பூர்: பாஜகவில் இணைந்த 5 ஜேடியூ எம்.எல்.ஏ.க்கள்!

DIN


மணிப்பூர் ஐக்கிய ஜனதா தள கட்சியில் இருந்த 6 எம்.எல்.ஏ.க்களில் 5 எம்.எல்.ஏ.க்கள் பாஜாகவில் இணைந்துள்ளனர். 

மணிப்பூரில் பைரன் சிங் தலைமையில் பாஜக ஆட்சி செய்கிறது. 60 சட்டப்பேரவை தொகுதிகளைக் கொண்ட மணிப்பூரில் 32 தொகுதிகளில் பாஜக வென்றது. 7 தொகுதிகளில் என்பிபி கட்சியும் 6 தொகுதிகளில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தள கட்சியும் வென்றது. இந்நிலையில் மணிப்பூரில் ஐக்கிய ஜனதா தளக் கட்சியில் இருந்து 5 எம்எல்ஏக்கள் நேற்று மாலை பாஜகவில் இணைந்தனர். இது நிதிஷ் கட்சிக்குப் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

சபாநாயகர் மணிப்பூர் சட்டப் பேரவை, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பத்தாவது அட்டவணையின் கீழ், மணிப்பூர் சட்டமன்றத்தில் பாஜகவின் சட்டமன்றக் கட்சியுடன் ஜேடி(யு) வின் பின்வரும் மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்களை இணைப்பதை ஏற்றுக்கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறார் என சட்டசபை செயலாளர் மெகஜித் சிங் தெரிவித்துள்ளார். 

5 எம்.எல்.ஏ.க்கள்: ஜோய்கிஷான் சிங், குர்சங்கியூர் சனடே, எம்டி அசாப் உதீன், தங்ஜம் அருண்குமார், எல்எம் கௌட். 

மணிப்பூர் சட்டப்பேரவைக்கு கடந்த மார்ச் மாதம் தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 60 தொகுதிகளில் 32 இடங்களில் பாஜக வெற்றி பெற்றது. பாஜக கூட்டணி ஐக்கிய ஜனதா தளம் 6 இடங்களில் வெற்றி பெற்றது.

ஐக்கிய ஜனதா தளத்திலிருந்து விலகிய 5 எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்ததால் தற்போது பாஜகவில் 37 எம்எல்ஏக்கள் உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT