இந்தியா

தில்லி ஜஜடி கல்விக் கட்டணத்தில் 30 சதவீதம் குறைப்பு!

தில்லி ஐஐடி.யில் புதிதாக எம்.டெக் சேரும் மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தில் 30 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. 

PTI

தில்லி ஐஐடி.யில் புதிதாக எம்.டெக் சேரும் மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தில் 30 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. 

கட்டண உயர்வு தொடர்பாக மாணவர்களின் ஒரு பகுதியினர் மௌனப் போராட்டத்தை நடத்தி வந்தனர். இதைத் தொடர்ந்து, இயக்குனர் அமைத்த குழுவின் பரிந்துரைகளைத் தொடர்ந்து எம்.டெக் மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தில் 30 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. 

2021-22 இரண்டாம் செமஸ்டர் அல்லது அதற்குப் பிறகு சேர்ந்தவர்களுக்கான கல்விக் கட்டணமும் குறைக்கப்பட்டுள்ளது. எம்.டெக் முழுநேர கல்விக் கட்டணம் ஒரு செமஸ்டருக்கு ரூ.25 ஆயிரத்திலிருந்து, ஒரு செமஸ்டருக்கு ரூ.17,500 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து பிற முதுநிலை (பிஜி) படிப்புக்கான கல்விக் கட்டணம் 
மற்றும் பிற கட்டணங்கள் கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மகர ராசியா? மகிழ்ச்சியான செய்தி காத்திருக்கு: தினப்பலன்கள்!

வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்!

‘முடி மாற்று அறுவைச் சிகிச்சை: போலி மருத்துவா்கள் மீது நடவடிக்கை தேவை’

மீஞ்சூா் வரதராஜா பெருமாள் கோயிலில் 108 குடங்களில் சா்க்கரை பொங்கல் நைவேத்தியம்

தோ்வுக் கட்டண உயா்வைக் கண்டித்து அண்ணாமலைப் பல்கலை. பிப்.3-இல் முற்றுகை: மாணவா்கள் சங்கம் அறிவிப்பு

SCROLL FOR NEXT