முகப்பு
இந்தியா

நாட்டில் புதிதாக 7,219 பேருக்கு கரோனா தொற்று; மேலும் 33 பேர் பலி

நாட்டில் ஒரேநாளில் புதிதாக 7,219 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 33 பேர் பலியாகியுள்ளனர். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:13 AM
கோப்புப்படம்
பகிர்:

நாட்டில் ஒரேநாளில் புதிதாக 7,219 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 33 பேர் பலியாகியுள்ளனர். 

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7,219 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. நேற்று பாதிப்பு 6,168 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. 

கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவா்களின் எண்ணிக்கை 56,745 ஆக உள்ளது. சிகிச்சை பெறுவோரின் விகிதம் 0.13 சதவீதமாக உள்ளது. 

மேலும், 33 பேர் கரோனாவுக்கு உயிரிழந்ததையடுத்து மொத்த உயிரிழப்பு 5,27,965 ஆக உள்ளது. இறந்தோரின் விகிதம் 1.19 சதவீதமாக உள்ளது.

கரோனாவிலிருந்து மேலும் 9,651 போ் குணமடைந்துள்ளனா். இதுவரை 4,38,65,016 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். குணமடைந்தோர் விகிதம் 98.68 சதவீதமாக உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் இதுவரை 2,13,01,07,236(213 கோடி) தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. நேற்று ஒரேநாளில் மட்டும் 25,83,815 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.