இந்தியா

சைரஸ் மிஸ்திரியின் இழப்பு வர்த்தக உலகிற்கு பேரிழப்பு: பிரதமர் மோடி

டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி இழப்பிற்கு பிரதமர் நரேந்திர மோடி உள்பட பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

DIN

டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி இழப்பிற்கு பிரதமர் நரேந்திர மோடி உள்பட பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

சைரஸ் மிஸ்திரியின் இழப்பு வர்த்தக உலகிற்கு மாபெரும் இழப்பு எனவும் பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

அரசியல் தலைவர்கள் மற்றும் பலர் சைரஸ் மிஸ்திரியின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளது பின்வருமாறு:

பிரதமர் மோடி: சைரஸ் மிஸ்திரியின் இந்த திடீர் மறைவு அதிர்ச்சியளிக்கிறது. இந்திய பொருளாதாரத்தின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டவர்.

மூத்த காவல் அதிகாரி: சைரஸ் மிஸ்திரியின் மறைவு வர்த்தக உலகிற்கு மிகப் பெரிய இழப்பாகும். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

பியூஸ் கோயல்: சைரஸ் மிஸ்திரியின் திடீர் மறைவு அதிர்ச்சியளிக்கிறது. இந்திய நிறுவனம் ஒரு மிகச் சிறந்த மனிதரை இழந்துவிட்டது. இந்தியப் பொருளாதார வளர்ச்சிக்கு அவரது பங்களிப்பு மிகவும் இன்றியமையாதது. அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

நிதின் கட்கரி: சைரஸ் மிஸ்திரியின் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

ராகுல் காந்தி: டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி இறந்த துயரச் செய்தி அறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.நாட்டில் உள்ள சிறந்த தொழிலபதிர்களில் சைரஸ் மிஸ்திரியும் ஒருவர். இந்தியாவுடைய பொருளாதார வளர்ச்சிக்கு அவரது பங்களிப்பு மிகவும் இன்றியமையாதது. அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

சசி தரூர்: சைரஸ் மிஸ்திரியின் திடீர் மறைவு அதிர்ச்சியளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

சரத் பவார்: சைரஸ் மிஸ்திரியின் இறப்பு குறித்த துயரச் செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். அவர் ஒரு மிகச் சிறந்த தொழிலதிபர். தனியார் நிறுவனங்களில் ஜொலிக்கும் நட்சத்திரமாக இருந்தவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குடிபோதையில் அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! பாளையங்கோட்டையில் பரபரப்பு!

ரஷியாவிடமிருந்து இனி இந்தியா கச்சா எண்ணெய் வாங்கப்போவதில்லையாம்: டிரம்ப் தகவல்

வெண்ணிலவே... ரேஷ்மா பசுபுலேட்டி!

ரெட் ரோஸ்... சாக்‌ஷி அகர்வால்!

இனி நோயாளிகள் இல்லை, மருத்துவப் பயனாளிகள்: மு.க. ஸ்டாலின்

SCROLL FOR NEXT