பிகார் முதல்வர் நிதீஷ் குமார் முன்னாள் கர்நாடக முதல்வர் குமாரசாமியை சந்தித்து பேசினார்.
தனது தில்லி பயணத்தின்போது நிதீஷ் குமார் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் மற்றும் இடதுசாரி தலைவர்களையும் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஜனதா தளம் சார்பில் தேதிய நிர்வாகிகள் கூட்டம் தில்லியில் இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தின்போது முதல்வர் நிதீஷ் குமார், 2024 மக்களவைத் தேர்தல் குறித்து எதிர்க்கட்சித் தலைவர்களிடம் பேசி அவர்களை ஒன்றிணைக்க உள்ளதாக கூறப்பட்டு வந்தது.
தற்போது, தில்லியில் பிகார் முதல்வர் நிதீஷ் குமார் முன்னாள் கர்நாடக முதல்வர் குமாரசாமியை சந்தித்து பேசியுள்ளார்.
இதற்கு முன்னர் ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவரும் பிகாா் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.