முகப்பு
இந்தியா

லக்னெளவில் தனியார் ஹோட்டலில் தீ விபத்து: 2 பேர் பலி; 10 பேர் காயம்

லக்னெளவில் உள்ள தனியார் ஹோட்டலில் திங்கள்கிழமை காலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் இருவர் உயிரிழந்தனர். மேலும் 10 பேர் காயமடைந்தனர். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:14 AM
பகிர்:

லக்னெளவில் உள்ள தனியார் ஹோட்டலில் திங்கள்கிழமை காலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் இருவர் உயிரிழந்தனர். மேலும் 10 பேர் காயமடைந்தனர். 

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னெளவின் ஹஸ்ரத்கஞ்ச் பகுதியில் உள்ள லெவானா ஹோட்டலில் திங்கள்கிழமை காலை தீ விபத்து ஏற்பட்டது. தொடர்ந்து அங்கு மீட்புப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும் 10 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

கட்டடத்திற்குள் இன்னும் சிலர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. 
உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், விபத்தில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதனுடன், மாவட்ட ஆட்சியர் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகளும் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று மீட்புப் பணிகளை விரைவுபடுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.  மேலும் விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்கவும் காவல்துறைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இந்த விபத்து குறித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் இரங்கல் தெரிவித்துள்ளார். 

முழு கட்டுரையைப் படிக்க →