இந்தியா

நிதீஷ் குமார் - லாலு பிரசாத் யாதவ் சந்திப்பு!

DIN

பிகார் முதல்வர் நிதீஷ் குமார் ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவரும் பிகாா் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவை சந்தித்து பேசியுள்ளார்.  

தனது தில்லி பயணத்தின்போது நிதீஷ் குமார் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் மற்றும் இடதுசாரி தலைவர்களையும் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஜனதா தளம் சார்பில் தேதிய நிர்வாகிகள் கூட்டம் தில்லியில் இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தின்போது முதல்வர் நிதீஷ் குமார், 2024 மக்களவைத் தேர்தல் குறித்து எதிர்க்கட்சித் தலைவர்களிடம் பேசி அவர்களை ஒன்றிணைக்க உள்ளதாக கூறப்படுகிறது. 

தில்லி பயணத்திற்கு முன்பு நிதீஷ் குமார், “லாலு பிரசாத் யாதவிடம் பேசினேன். குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவரை தில்லியில் சந்திக்க இருக்கிறேன். மாலையில் ராகுல் காந்தியையும் சந்திக்க உள்ளேன்” எனக் கூறியுள்ளார். 

பாஜகவில் இருந்து பிரிந்து சென்ற பிறகு பிகார் முதல்வர் நிதீஷ் குமார் முதல் முறையாக தில்லி செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. பிகார் மாநிலத்தின் நீண்ட கால முதல்வராக இருந்து வரும் நிதிஷ் குமார் அடுத்து வரும் 2024 மக்களவைத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக இருக்கலாம் என்ற பேச்சும் அரசியல் வட்டாரங்களில் வலம் வருவதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 5 ஆண்டுகளில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமல்படுத்தப்படும்: ராஜ்நாத் சிங்

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

SCROLL FOR NEXT