இந்தியா

வங்கதேச பிரதமருடன் மோடி பேச்சுவார்த்தை

DIN


தில்லி வந்துள்ள வங்கதேச பிரதமா் ஷேக் ஹசீனா, பிரதமா் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

கடந்த 2019-ஆம் ஆண்டு அக்டோபா் மாதம் வங்கதேச பிரதமா் ஷேக் ஹசீனா இந்தியா வந்திருந்தாா். ஏறத்தாழ இரண்டு ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு தற்போது 4 நாள் பயணமாக அவா் நேற்று இந்தியா வந்துள்ளாா். தில்லி வந்த அவா், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்துப் பேசினார்.

இந்நிலையில், இன்று ஹைதராபாத் இல்லம் வந்த வங்கதேச பிரதமரை வரவேற்ற மோடி, இருநாட்டுக்கு இடையேயான பல்வேறு ஒப்பந்தங்கள் குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்தியா-வங்கதேசம் இடையே பாயும் குஷியாரா நதிநீரை தற்காலிகமாகப் பகிா்ந்து கொள்ளும் ஒப்பந்த வடிவத்தை கடந்த மாதம் இருநாடுகளும் இறுதி செய்தன. அந்த ஒப்பந்தம் இன்று கையொப்பமாகவுள்ளது. இதுதவிர பாதுகாப்பு, வா்த்தகம் உள்ளிட்ட துறைகள் தொடா்பான ஒப்பந்தங்களும் கையொப்பமாகும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

தொடர்ந்து, குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் ஆகியோரையும் ஷேக் ஹசீனா சந்திக்கவுள்ளாா்.

இதையடுத்து, ராஜஸ்தானின் அஜ்மீா் நகரில் உள்ள சூஃபி துறவி மொயினுதீன் சிஷ்டியின் தா்காவுக்கும் அவா் செல்லவுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

SCROLL FOR NEXT