இந்தியா

நாட்டில் 80 % அரசுப் பள்ளிகள் குப்பைக் கிடங்குகளை விட மோசமானவை: கேஜரிவால்

PTI

நாட்டில் உள்ள 80 சதவீத அரசுப் பள்ளிகள் குப்பைக் கிடங்குகளை விட மோசமாக உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடிக்கு தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கடிதம் எழுதியுள்ளார். 

14,500 பள்ளிகளை நவீனமயமாக்கும் பிரதமரின் முடிவை கடலில் ஒரு துளி நீர் என்று தொடர்ந்து பேசிய கேஜரிவால், நாட்டில் உள்ள 10 லட்சம் அரசுப் பள்ளிகளையும் மேம்படுத்தும் திட்டத்தை மீண்டும் வலியுறுத்தினார். 

இந்தியாவில் தினமும் 27 கோடி மாணவர்கள் பள்ளிக்குச் செல்கிறார்கள். அதில் 18 கோடி மாணவர்கள் அரசுப் பள்ளிகளுக்குச் செல்கின்றனர். அதில் 80 சதவீத அரசுப் பள்ளிகளின் நிலைக் குப்பைக் கிடங்கை விட மோசமாக உள்ளது. 

கோடிக்கணக்கான குழந்தைகளுக்கு இதுபோன்ற கல்வியை வழங்கினால், நாடு எப்படி வளர்ச்சியடையும் என்று கற்பனை செய்து பாருங்கள் என்று கேஜரிவால் இந்தியில் எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

14,500 பள்ளிகளை நவீனமயமாக்க நீங்கள் திட்டம் வகுத்துள்ளீர்கள் ஆனால் இந்த வேகத்தில் செயல்பட்டால், அரசுப் பள்ளிகளைத் தரம் உயர்த்த 100 ஆண்டுகள் ஆகும்.

நாட்டில் உள்ள அனைத்து 10 லட்சம் அரசுப் பள்ளிகளையும் மறுசீரமைப்பதற்கான திட்டத்தைத் தயாரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன், என்று அவர் மேலும் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

SCROLL FOR NEXT