கோப்புப்படம் 
இந்தியா

நீட் தேர்வு முடிவுகள் வெளியானது

இளநிலை மருத்துவப் படிப்புகளின் சோ்க்கைக்கான நீட் தோ்வு முடிவுகள் இன்று  (செப். 7) இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

DIN

இளநிலை மருத்துவப் படிப்புகளின் சோ்க்கைக்கான நீட் தோ்வு முடிவுகள் இன்று  (செப். 7) இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு (நீட்) அடிப்படையில் மாணவா் சோ்க்கை நடத்தப்படுகிறது. இந்தத் தோ்வை தேசிய தோ்வு முகமை(என்டிஏ) நடத்துகிறது.

அதன்படி, நிகழாண்டு நீட் தோ்வு நாடு முழுவதும் 497 நகரங்களில் 3,570 மையங்களில் கடந்த ஜூலை 17-ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தோ்வை 17.78 லட்சம் மாணவா்கள் எழுதினா். தமிழகத்தில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோா் தோ்வில் பங்கேற்றனா். விடைக்குறிப்பு, தோ்வா்களின் ஓஎம்ஆா் விடைத்தாள் நகல்கள் ஆக. 31-ஆம் தேதி வெளியிடப்பட்டது.

இந்நிலையில், நீட் தோ்வு முடிவுகள் இன்று  (செப். 7) வெளியாகி உள்ளன. மாணவா்கள் மதிப்பெண் விவரங்களை https://neet.nta.nic.in  என்ற இணையதளம் வாயிலாக அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீட் தோ்வு முடிவுகள் வெளியான பின்னா் தமிழகத்தில் இளநிலை பொறியியல் படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு செப். 10-ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கல்லூரி மாணவா்களுக்கு உதவித் தொகை, கைவினைஞா்களுக்கு விருதுகள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்

இன்று 17 மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை

உயிரி எரிபொருளால் என்ஜின் பாதிப்பா? மத்திய அமைச்சா் திட்டவட்ட மறுப்பு

காகித, அட்டை இறக்குமதி 8% அதிகரிப்பு

எம் & எம் வாகன விற்பனை சரிவு

SCROLL FOR NEXT