முகப்பு
இந்தியா

மத்தியப் பிரதேசம்: விலங்கியல் பூங்காவில் குட்டியைக் கொன்ற தாய்ப் புலி

குவாலியரில் உள்ள விலங்கியல் பூங்காவில் தாய் புலி ஒன்று தனது குட்டியையே தாக்கிக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:17 AM
கோப்புப் படம்.
பகிர்:

குவாலியரில் உள்ள விலங்கியல் பூங்காவில் தாய் புலி ஒன்று தனது குட்டியையே தாக்கிக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம், குவாலியரில் காந்தி பிராணி உதயன் எனும் விலங்கியல் பூங்கா உள்ளது. இங்கு மீரா என்கிற பெண் புலிக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், ஆண் மற்றும் பெண் என இரண்டு குட்டிகள் பிறந்தன. அதில் பவானி என்கிற பெண் புலி குட்டி பிறந்ததில் இருந்து பலவீனமாக இருந்ததாக கூறப்படுகிறது.

இருப்பினும், அந்த குட்டியையும் தாய் புலியுடன் சேர்த்து தங்க வைத்துள்ளனர். இந்த நிலையில் தாய் புலி மீரா, பெண் குட்டிப் புலியை திடீரென தாக்கியது. இதில் குட்டிப் புலிக்கு  கால் மற்றும் கழுத்துப் பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த புலிக் குட்டி இறந்தது. 

தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி வனத்துறை அதிகாரிகள் முன்னிலையில் குட்டியின் சடலம் அப்புறப்படுத்தப்பட்டது. விலங்கியல் பூங்காவில் தற்போது ஐந்து புலிகள் உள்ளன என்று குவாலியர் நகராட்சியின் கூடுதல் ஆணையர் முகுல் குப்தா தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.