இந்தியா

போஸ்டர் போட்டு அதிரடி காட்டும் சமாஜ்வாதி கட்சி

DIN


லக்னௌ: ஐக்கிய ஜனதா தள தலைவரும் பிகார் முதல்வருமான நிதீஷ் குமாரும், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவும் நேற்று சந்தித்த நிலையில், கட்சி அலுவலகத்தில் ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டர்கள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேசம் + பிகார் = மோடி அரசு வெளியேற்றம் என்று சமாஜ்வாதி கட்சியினர் அச்சடித்த போஸ்டரில் கூறப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேசத்துக்கு 80 மக்களவைத் தொகுதிகளும், பிகாருக்கு 40 தொகுதிகளும் சேர்த்து ஒட்டுமொத்தமாக 120 மக்களவைத் தொகுதிகள் இருப்பதால், மத்தியில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்றால், இவ்விரு மாநிலங்களில் மக்களிடையே அதிக வரவேற்பு பெரும் கட்சிக்கு அதிக வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.

இதனை வெளிப்படுத்தும் வகையில்தான் சமாஜ்வாதி கட்சி சார்பில் இப்படி ஒரு போஸ்டர் அடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை பவுனுக்கு ரூ.640 உயா்வு

மகளிா் டி20: வங்கதேசத்துடனான தொடரை வென்றது இந்திய அணி

சங்கரன்கோவில் கல்வி மாவட்டம் உருவாக்க வலியுறுத்தல்

டாஸ்மாக் ஊழியரிடம் வழிப்பறி செய்ய முயன்ற இருவா் கைது

ஆறுமுகனேரியில் அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல்

SCROLL FOR NEXT