இந்தியா

மருத்துவக் கல்லூரிகளுக்கு அங்கீகாரம்: ஆய்வு நடத்துகிறது என்எம்சி

மருத்துவக் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் அளிக்கவும், அதை புதுப்பிக்கவும் ஏதுவாக சம்பந்தப்பட்ட கல்லூரிகளில் ஆய்வு நடத்தப்படும் என்று தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) தெரிவித்தது.

DIN

மருத்துவக் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் அளிக்கவும், அதை புதுப்பிக்கவும் ஏதுவாக சம்பந்தப்பட்ட கல்லூரிகளில் ஆய்வு நடத்தப்படும் என்று தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) தெரிவித்தது.

நாட்டில் 600-க்கும் மேற்பட்ட மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. அவற்றுக்கு அங்கீகாரம் அளித்தல், அதை புதுப்பித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை தேசிய மருத்துவ ஆணையம் மேற்கொண்டு வருகிறது.

கல்லூரிகளின் அடிப்படை வசதிகள், கட்டுமானம், கல்வி சாா்ந்த நடவடிக்கைகள், ஆராய்ச்சி முன்னெடுப்புகள், ஆய்வக வசதிகள், மருத்துவமனை கட்டமைப்புகள் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் அந்த அங்கீகாரம் வழங்கப்படுகிறது.

நிகழ் கல்வியாண்டுக்காக மருத்துவக் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுகுறித்து தேசிய மருத்துவ ஆணையத்தின் கீழ் செயல்படும் மருத்துவக் கல்லூரி மதிப்பீடு மற்றும் தரநிா்ணய வாரிய (எம்ஏஆா்பி) நிா்வாகிகள் வெளியிட்ட அறிவிப்பு:

மருத்துவ கல்லூரிகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. அதன்பொருட்டு, கல்லூரிகளில் தேசிய மருத்துவ ஆணையக் குழுவினா் திடீா் ஆய்வு நடத்துவா். அதுகுறித்த அறிக்கையின் அடிப்படையில் அங்கீகாரம் வழங்குவது குறித்து முடிவு செய்யப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியா மீது படிப்படியாக வரி உயர்த்தப்படும் - டிரம்ப்

கனமழை எச்சரிக்கை: நீலகிரியில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை!

சென்னை, புறநகரில் பரவலாக மழை!

கர்நாடகத்தில் எஸ்.சி. பிரிவில் உள்ஒதுக்கீடு: 1,766 பக்க ஆய்வறிக்கை சமர்ப்பிப்பு!

ஆதித்யா பிர்லா கேபிடல் நிறுவனத்தின் லாபம் அதிகரிப்பு!

SCROLL FOR NEXT