இந்தியா

மஸ்கட்டில் ஏர் இந்தியா விமானத்தில் தீ: அவசரமாக வெளியேற்றப்பட்ட கொச்சி பயணிகள்

மஸ்கட்டிலிருந்து கொச்சி புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் திடீரென கிளம்பிய புகையால் பயணிகள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர். 

DIN

மஸ்கட்டிலிருந்து கொச்சி புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் திடீரென கிளம்பிய புகையால் பயணிகள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர். 

ஏமன் நாட்டின் தலைநகரான மஸ்கட்டிலிருந்து புதன்கிழமை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஒன்று கொச்சி புறப்பட்டது. அப்போது திடீரென விமானத்தின் என்ஜினிலிருந்து புகை வெளியேற ஆரம்பித்தது. 

இதனால் அதிர்ச்சியடைந்த விமானிகள் விமானத்தை ஓடுதளத்திலிருந்து வெளியேற்றினர். இந்த புகையால் பயணிகள் 14 பேர் மூச்சுத் திணறலுக்கு ஆளானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது 

புகை மண்டலத்தால் சூழ்ந்த விமானத்திலிருந்து அவசர கால வெளியேற்றத்தின் மூலம் பயணிகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொள்ளப்படும் என ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் பயணிகளை மாற்று விமானத்தில் கொச்சி அழைத்துவருவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமர் மோடி பிறந்த நாளுக்கு பரிசு அனுப்பிய மெஸ்ஸி! என்ன தெரியுமா?

ஐசிசி ஒருநாள் தரவரிசையில் ஸ்மிருதி மந்தனா மீண்டும் முதலிடம்!

சத்தீஸ்கரில் ரூ.8 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்ட பெண் நக்சல் சரண்!

5,400 பேருக்கு வேலைவாய்ப்பு... 4 புதிய தொழிற்பேட்டைகள்: முதல்வர் திறந்து வைத்தார்!

15 புதிய பட்டுப் புடவைகளை அறிமுகப்படுத்தும் ஆரெம்கேவி!

SCROLL FOR NEXT