இந்தியா

ராகுல் காந்தியின் நடைப்பயணம் இன்று ஓய்வு: நாளை மீண்டும் தொடங்குகிறது

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தலைமையில் நடைபெறும் இந்திய ஒற்றுமை நடைப்பயணம் இன்று ஒருநாள் ஓய்வுக்கு பிறகு நாளை மீண்டும் தொடங்கவுள்ளது.

DIN

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தலைமையில் நடைபெறும் இந்திய ஒற்றுமை நடைப்பயணம் இன்று ஒருநாள் ஓய்வுக்கு பிறகு நாளை மீண்டும் தொடங்கவுள்ளது.

மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எதிராக மக்களை ஒன்றுதிரட்டும் நோக்கில் ‘பாரத் ஜோடோ’ நடைப்பயணத்தை காங்கிரஸ் நடத்தி வருகிறது. அக்கட்சி எம்.பி. ராகுல் காந்தி நடைப்பயணத்தை முன்னின்று நடத்தி, செல்லும் இடங்களில் மக்களைச் சந்தித்து வருகிறாா். தமிழகத்தில் நிறைவடைந்த நடைப்பயணம், தற்போது கேரளத்தில் நடைபெற்று வருகிறது.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற நடைப்பயணம், நேற்று இரவு சாத்தனூரில் பொதுக்கூட்டத்துடன் 7வது நாள் பயணம் முடிக்கப்பட்டது. மொத்தம் 150 கி.மீ. கடந்துள்ள நிலையில், இன்று ஓய்வுநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் நாளை காலை கொல்லம் மாவட்டத்திலிருந்து ஒற்றுமை நடைப்பயணம் தொடங்கும் என்று காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 150 நாள்கள் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை 3,600 கி.மீ. நடைப்பயணம் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வங்கதேச வன்முறை- ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை

கிண்டலில் தொடங்கி அழுகையில் முடிவு... உலகக் கோப்பையில் இருந்து ஹங்கேரி வெளியேற்றம்!

நகர் உலா... அனந்திகா!

யுகங்கள் போதாது...நிகிதா சர்மா

கற்பனைகள் கவிபாடும்... சனம் ஜோஷி

SCROLL FOR NEXT