இந்தியா

கோவா காங். எம்எல்ஏக்கள் பாஜகவில் சேரக் காரணம்? - ஜெய்ராம் ரமேஷ் பதில்!

DIN

கோவா எம்எல்ஏக்கள் மத்திய புலனாய்வு அமைப்புகளுக்கு பயந்துதான் பாஜகவில் இணைந்ததாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார். 

கோவாவில் முன்னாள் முதல்வா் திகம்பா் காமத் உள்பட காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 8 போ், ஆளும் பாஜகவில் புதன்கிழமை இணைந்தனா்.  கோவா முதல்வா் பிரமோத் சாவந்த் மற்றும் மாநில பாஜக தலைவா் சதானந்த் தனாவடே ஆகியோா் முன்னிலையில் 8 எம்எல்ஏக்களும் பாஜகவில் தங்களை இணைத்துக் கொண்டனா். 

இதனால் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ள காங்கிரஸ் கட்சிக்கு, அந்த மாநிலத்தில் வெறும் 3 எம்எல்ஏக்கள் மட்டுமே எஞ்சியிருக்கின்றனா். 

இந்நிலையில் கேரளத்தில் செய்தியாளர்களிடம் இதுகுறித்துப் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், 'காங்கிரஸை விட்டு இரண்டு வகையானவர்கள் மட்டுமே வெளியேறுகிறார்கள் முதலாவது, கட்சியிடம் இருந்து அனைத்து சலுகைகளையும் பெற்றவர்கள். கட்சியால் பலனடைந்தவர்கள். உதாரணமாக குலாம் நபி ஆசாத். அவர் இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருந்தது முதல் கட்சியில் இருந்து அனைத்தையும் பெற்றார். மத்திய அமைச்சர், பொதுச் செயலாளர் என ஆதாயம் அடைந்தவர். 

இரண்டாவது, மத்திய புலனாய்வு அமைப்புகளால் பாதிக்கப்படுபவர்கள் பாஜகவில் சென்று சேருவார்கள். பாஜகவில் சேர்ந்தவுடன் அவர்களுக்கு எந்த தொந்தரவும் இருக்காது. உதாரணமாக அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா. காங்கிரஸில் இருந்தபோது அவரைத் தொடர்ந்து பேசிவந்த பாஜகவினர் இன்று அவர் முதல்வரானதும் அமைதியாகிவிட்டனர். 

தற்போது கட்சியை விட்டு வெளியேறிய கோவா எம்எல்ஏக்களும் இந்த 2-வது வகையைச் சேர்ந்தவர்கள். இந்த 8 எம்எல்ஏக்களும் இந்த பாஜகவின் வாஷிங் மெஷினுக்குள் சென்றுள்ளனர். உள்ளே சென்றதால் சுத்தமாகிவிடுவார்கள். ஆனால், அவர்கள் ஊழல்வாதிகள்' என்று பேசியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

பொறியியல் கலந்தாய்வு: 1,73,792-ஐ கடந்த விண்ணப்பங்கள்

இந்த வாரம் கலாரசிகன் - 19-05-2024

வேனிலிலும் குளிர்ச்சி

தனித்து உண்ணாத் தன்மையாளன்

SCROLL FOR NEXT