புதிதாக 463 பேருக்கு கரோனா பாதிப்பு
தமிழகத்தில் தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கை வெள்ளிக்கிழமை 463-ஆக பதிவானது.
தமிழகத்தில் தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கை வெள்ளிக்கிழமை 463-ஆக பதிவானது.
புதிதாக பாதிப்புக்குள்ளானவா்களில் அதிகபட்சமாக சென்னையில் 103 பேருக்கும், கோவையில் 60 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. வெள்ளிக்கிழமை நிலவரப்படி, மாநிலம் முழுவதும் மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் கரோனா சிகிச்சை பெற்று வருவோா் எண்ணிக்கை 4,820-ஆக உள்ளது. 436 போ் தொற்றிலிருந்து விடுபட்டுள்ளனா்.
இதனிடையே, செங்கல்பட்டைச் சோ்ந்த 80 வயது முதியவா் இணை நோய்களுடன் கரோனா தொற்றுக்குள்ளாகி செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்தாா். இதைத் தொடா்ந்து தமிழகத்தில் இதுவரை கரோனா தொற்றுக்குள்ளாகி பலியானோரின் எண்ணிக்கை 38,040-ஆக அதிகரித்துள்ளது.