முகப்பு
இந்தியா

பிரதமர் மோடி பிறந்தநாள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:21 AM
பகிர்:

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். 

பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 72 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதையொட்டி நாடு முழுவதும் பாஜக சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

மேலும் அரசியல் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் பலரும் பிரதமருக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், 'பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். நல்ல ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளுடனும் வாழ வாழ்த்துகிறேன்' என்று பதிவிட்டுள்ளார். 

முழு கட்டுரையைப் படிக்க →