மேற்கு வங்கத்தில் உள்ள பள்ளியில் வெடிகுண்டு வெடித்ததால் மாணவர்கள் பீதியடைந்துள்ளனர்.
மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பரகானாஸ் பகுதியில் உள்ள பள்ளிக் கட்டடத்தின் மேற்கூரையில் சனிக்கிழமை நாட்டு வெடிகுண்டு வெடித்தது. திதாகர் பள்ளியில் வகுப்புகள் நடந்து கொண்டிருந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது.
நாட்டு வெடிகுண்டு வெடித்த சம்பவம் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். திதாகர் உயர்நிலைப் பள்ளியில் வகுப்புகள் நடந்து கொண்டிருந்தபோது, சனிக்கிழமை காலை 11 மணியளவில் மேற்கூரை மேல் இருந்து வெடிச் சத்தம் கேட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்த ஆசிரியர்கள் மேற்கூரையின் பகுதி சேதமடைந்திருப்பதை கண்டனர்.
பள்ளி கட்டிடத்தின் மீது அடையாளம் தெரியாத நபர்கள் நாட்டு வெடிகுண்டை வீசியுள்ளனரா அல்லது பள்ளியில் முன்பே நாட்டு வெடிகுண்டு வைக்கப்பட்டதா என்பது குறித்து முதற்கட்ட விசாரணை நடைபெற்று வருகிறது.
இதையும் படிக்க: பல்கலை. துணைவேந்தர் நியமனம்: தொடரும் கேரள முதல்வர், ஆளுநர் மோதல்
இந்த சம்பவத்தில் உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.