இந்தியா

நாட்டில் குறைந்து வரும் தொற்று பாதிப்பு: புதிதாக 4,858 பேருக்கு தொற்று

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 4,858 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 4,45,39,046 ஆக உயர்ந்துள்ளது.

DIN

புது தில்லி: நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 4,858 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 4,45,39,046 ஆக உயர்ந்துள்ளது, அதே நேரத்தில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 48,027 ஆக உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 5,664 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. 

கடந்த 24 மணி நேரத்தில் 4,555 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,39,62,664 ஆக பதிவாகியுள்ளது. குணமடைந்தோரின் விகிதம் 98.71 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் கேரளித்தில் மட்டும் 8 பேர் இறந்துள்ளனர். நாட்டில் இதுவரை பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 5,28,355 ஆக உள்ளது. இறப்பு விகிதம் 1.19 ஆக உள்ளது.

நாட்டில் இதுவரை 2,16,70,14,127 டோஸ் தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. நேற்று ஒரேநாளில் மட்டும் 13,59,361 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேரிலிண் மன்ரோ லுக்... ஓவியா!

சலம்பல பாடல் புரோமோ!

2-வது போட்டியில் மே.இ.தீவுகள் வெற்றி; சமனில் டி20 தொடர்!

ரசிகர்களின் அன்பை சுயலாபத்துக்காக பயன்படுத்த மாட்டேன்! -நடிகர் அஜித்குமார்

ஊரும் லிரிக்கல் பாடல் வெளியானது!

SCROLL FOR NEXT