முகப்பு
இந்தியா

புடவையுடன் கால்பந்து விளையாடிய திரிணமூல் எம்.பி.! வைரலாகும் படங்கள்

மேற்கு வங்கத்தில் மாவட்ட அளவில் நடைபெற்ற கால்பந்து போட்டி நிகழ்ச்சியில் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.     மஹுவா மொய்த்ரா புடவையுடன் கால்பந்து விளையாடிய புகைப்படங்கள் இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிற

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:22 AM
மஹுவா மொய்த்ரா
பகிர்:

மேற்கு வங்கத்தில் மாவட்ட அளவில் நடைபெற்ற கால்பந்து போட்டி நிகழ்ச்சியில் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.     மஹுவா மொய்த்ரா புடவையுடன் கால்பந்து விளையாடிய புகைப்படங்கள் இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. 

மேற்கு வங்க மாநிலம் நாடியா மாவட்டத்தில் மாவட்ட அளவிலான கால்பந்துப் போட்டி நடைபெற்றது. இதன் இறுதிப்போட்டி நிகழ்ச்சியில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி. மஹுவா மொய்த்ரா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். 

பின்னர் போட்டி நடைபெறும் திடலில் இறங்கி, புடவையுடன் கால்பந்து விளையாடி மகிழ்ந்தார். மேலும், புடவையுடன் ஷூ அணிந்து கால்பந்தை உதைக்கும் புகைப்படங்களையும் அவர் பகிர்ந்துள்ளார். 

கிருஷ்ணாநகர் எம்.பி. கால்பந்துப்போட்டி 2022 இறுதி நிகழ்ச்சியின் மகிழ்ச்சியான தருணங்கள் எனக் குறிப்பிட்டு, ஆம். நான் புடவை அணிந்து கால்பந்து விளையாடுகிறேன் எனப் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.