இந்தியா

கேரளத்தில் 13-ஆவது நாளாக ராகுல் காந்தி நடைப்பயணம்

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, இன்று 13-வது நாளாக தொண்டர்களுடன், ஆலப்புழா மாவட்டத்தில்  நடைப்பயணத்தை தொடங்கினார்.

DIN

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, இன்று 13-வது நாளாக தொண்டர்களுடன், ஆலப்புழா மாவட்டத்தில்  நடைப்பயணத்தை தொடங்கினார்.

மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எதிராக மக்களை ஒன்றுதிரட்டும் நோக்கில் ‘பாரத் ஜோடோ’ நடைப்பயணத்தை காங்கிரஸ் நடத்தி வருகிறது. அக்கட்சி எம்.பி. ராகுல் காந்தி நடைப்பயணத்தை முன்னின்று நடத்தி, செல்லும் இடங்களில் மக்களைச் சந்தித்து வருகிறாா். தமிழகத்தில் நிறைவடைந்த நடைப்பயணம், தற்போது கேரளத்தில் நடைபெற்று வருகிறது.

கேரளத்தில் நடைப்பயணம் மேற்கொண்டு வரும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, ஆலப்புழை மாவட்டம் வடக்கல் கடற்கரையில் மீனவா்களை திங்கள்கிழமை காலை 6 மணிக்கு சந்தித்து கலந்துரையாடினாா்.

கேரளத்தில் ராகுல் காந்தியின் நடைப்பயணம் திங்கள்கிழமை 12-ஆவது நாளாக நீடித்தது. ஆலப்புழை மாவட்டம் புன்னப்ராவில் காலை நடைப்பயணத்தை தொடங்கிய அவா், 16 கி.மீ. கடந்து களவூரில் நிறைவு செய்தாா். பின்னா், மாலை 4.30 மணியளவில் மீண்டும் நடைப்பயணத்தை தொடங்கி, 9 கி.மீ. கடந்து சோ்தலா அருகே உள்ள மயித்தாரா பகுதியில் நடைப்பயணத்தை முடித்துக் கொண்டாா்.

இந்நிலையில் இன்று ஆலப்புழா மாவட்டத்தில்  நடைப்பயணத்தை தொடங்கினார்.

மொத்தம் 150 நாள்கள் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை 3,600 கி.மீ. நடைப்பயணம் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்துக்களைப் பயங்கரவாதிகளாக சித்தரிக்க காங்கிரஸ் முயற்சி: ஃபட்னவீஸ்

வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்வோருக்கான முக்கிய அறிவிப்பு!

அஞ்சல் துறையில் மாற்றம்: செப்.1 முதல் பதிவு அஞ்சல் அனுப்ப முடியாது!

பெங்களூரில் 13 வயது சிறுவன் எரித்துக் கொலை! காரணம் என்ன?

ஆணவப்படுகொலை செய்யப்பட்ட Kavin உடலுக்கு KN Nehru நேரில் அஞ்சலி!

SCROLL FOR NEXT