இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் உயிரியல் பூங்கா: 70 சதவீத பணிகள் நிறைவு!

ஜம்மு-காஷ்மீரில் கட்டப்பட்டு வரும் உயிரியல் பூங்காவின் பணிகள் சுமார் 70 சதவீதம் நிறைவடைந்துள்ளதாகவும், விரைவில் பொதுமக்கள் பார்வைக்காகத் திறக்க ஆலோசித்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். 

DIN

ஜம்மு-காஷ்மீரில் கட்டப்பட்டு வரும் உயிரியல் பூங்காவின் பணிகள் சுமார் 70 சதவீதம் நிறைவடைந்துள்ளதாகவும், விரைவில் பொதுமக்கள் பார்வைக்காகத் திறக்க ஆலோசித்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். 

வட இந்தியாவில் மிகப் பெரியதாகக் கருதப்படும் கான்பூர் நக்ரோட்டாவில் இந்த உயிரியல் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தலைமைச் செயலாளர் அருண் குமார் மேத்தா கூறுகையில், 

கட்டப்பட்டு வரும் ஜம்போ உயிரியல் பூங்கா முடிக்கப்பட்ட பகுதியை விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்குத் திறந்து விடுவதற்காக உள் சாலைகளின் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகிறது. 

இந்த பூங்காவில் பெங்கால் புலி மற்றும் ஆசிய சிங்கம் உள்பட 27 விலங்குகள் அமைக்கப்பட உள்ளது. அதனுடன் பட்டாம்பூச்சி பூங்காவும் அமைக்க உள்ளது. 

உயிரியல் பூங்கா 163 பரப்பளவில் கட்டப்பட்டு வருகிறது. இதன் 70 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. நிதி நெருக்கடியின் காரணமாக பூங்கா பணிகள் இடையில் நிறுத்தப்பட்டது. 2019 இல் இந்த பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. 

ஜம்பு உயிரியல் பூங்கா திட்டத்திற்கு 121 கோடி ரூபாய் செலவில் அதிகாரிகள் ஒப்புதல் அளித்தனர். மத்திய உயிரியல் பூங்கா ஆணையம் 2016 இல் உயிரியல் பூங்கா  அமைப்பதற்கான திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மறுசீரமைப்பு ஆணையை ரத்து செய்ய வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

ரயில்வே மேம்பாலம் பராமரிப்பு பணி: எம்எல்ஏ ஆய்வு

திருந்திய நெல் சாகுபடியில் அதிக மகசூல் பெறும் விவசாயிக்கு விருது: ஆட்சியா்

அமெரிக்க செயற்கைக்கோளை டிச. 24-இல் ஏவுகிறது இஸ்ரோ

மின்சாரம் பாய்ந்து கட்டுமானத் தொழிலாளி உயிரிழப்பு

SCROLL FOR NEXT