இந்தியா

பெரும்பாலான மாநிலங்கள் ராகுல் காந்திக்கு ஆதரவு: சச்சின் பைலட்

காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி வரவேண்டும் என்று பெரும்பாலான மாநிலங்கள் கூறுவதாக மூத்த தலைவர் சச்சின் பைலட் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

DIN

காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி வரவேண்டும் என்று பெரும்பாலான மாநிலங்கள் கூறுவதாக மூத்த தலைவர் சச்சின் பைலட் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

அனைத்து தரப்பினரும் எதிர்பார்த்து காத்திருக்கும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் அக்டோபர் 17ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடுபவர்கள் விவரம் இன்னும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை.

இந்நிலையில், தமிழ்நாடு, ராஜஸ்தான், சத்தீஸ்கர், பிகார், புதுவை உள்ளிட்ட மாநிலங்களின் காங்கிரஸ் கமிட்டிகள் ராகுல் காந்தி தலைவராக வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

ஆனால், கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தோல்விக்கு பொறுப்பேற்று, அப்பதவியிலிருந்து விலகிய ராகுல் காந்தி மீண்டும் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்க மறுத்துவருகிறார். 

இந்நிலையில், கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் ஒற்றுமைக்கான இந்தியா நடைப்பயணத்தில் இன்று பங்கேற்ற சச்சின் பைலட் செய்தியாளரிடம் கூறுகையில்,

காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி வர வேண்டும் என்று பெரும்பாலான மாநிலங்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். அவர் போட்டியிடுவாரா இல்லையா என்பது அவரது முடிவு. ஆனால் ஒன்று மட்டும் உறுதி, அக். 17ஆம் தேதி கட்சியின் புதிய தலைவருக்கான வாக்குப்பதிவு நடைபெறும் என்றார்.

இதற்கிடையே காங்கிரஸ் தலைவர் தேர்தலில் மூத்த தலைவர்களான அசோக் கெலாட், சசி தரூர் போட்டியிட விருப்பம் தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடலூர், சாத்தமங்கலம் அருகே மின் கம்பி அறுந்து விழுந்ததில் மூவர் பலி

தாய்ப்பாலில் யுரேனியம்! ஆபத்தில் 70% குழந்தைகள்!! - ஆய்வில் அதிர்ச்சித் தகவல்

ரயில் மோதி சரக்கு வாகனம் சேதம்! நல்வாய்ப்பாக உயிர்சேதம் தவிர்ப்பு! | Selam

முதல் சதமடித்த தமிழக பூர்வகுடியான தெ.ஆ. வீரர்..! யார் இந்த செனுரன் முத்துசாமி?

ஒருபோதும் மூட மாட்டோம்: அல்-ஃபலாஹ் பல்கலை விளக்கம்

SCROLL FOR NEXT