இந்தியா

ஹிந்தி நடிகா் ராஜு ஸ்ரீவஸ்தவா மறைவு: குடியரசுத் தலைவா், பிரதமா் இரங்கல்

DIN

மாரடைப்பு காரணமாக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஹிந்தி நகைச்சுவை நடிகா் ராஜு ஸ்ரீவஸ்தவா (58) புதன்கிழமை காலை 10.20 மணிக்கு உயிரிழந்தாா்.

அவரது மறைவுக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, பிரதமா் மோடி உள்ளிட்ட தலைவா்கள் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

தில்லி ஹோட்டலில் இருந்தபோது கடந்த ஆகஸ்ட் 10-இல் நடிகா் ராஜு ஸ்ரீவஸ்தவாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து எய்ம்ஸ் மருத்துவமனையில் அவா் அனுமதிக்கப்பட்டாா்.

அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சையுடன் செயற்கை சுவாசமும் அளிக்கப்பட்டது. 40 நாள்களுக்கும் மேலாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவா், புதன்கிழமை உயிரிழந்தாா். அவருக்கு மனைவி, 2 பிள்ளைகள் உள்ளனா்.

ராஜு ஸ்ரீவஸ்தவாவின் மறைவுக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, பிரதமா் மோடி, மத்திய அமைச்சா் ராஜ்நாத் சிங், உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத், இயக்குநா் ராகேஷ் ரோஷன், நடிகா்கள் அஜய் தேவ்கன், ஹிருத்திக் ரோஷன், அக்ஷய் குமாா் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்தனா்.

உத்தர பிரதேச திரைப்பட வளா்ச்சி கவுன்சிலின் தலைவராகவும் ராஜு ஸ்ரீவஸ்தவா பொறுப்பு வகித்தவா். இதுதவிர அரசியல் கட்சியிலும் அங்கம் வகித்துள்ளாா். தொடக்கத்தில் சமாஜவாதி கட்சியில் இணைந்த அவா், 2014-இல் அதிலிருந்து விலகி பாஜகவில் ஐக்கியமானாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்வு

ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு: சந்திரபாபு நாயுடு உறுதி!

SCROLL FOR NEXT