வதோதரா சிறையில் கைதிகளுக்கிடையே மோதல்: 7 பேர் மருத்துவமனையில் அனுமதி!
குஜராத் மாநிலம் வதோதரா மத்தியச் சிறையில் கைதிகளுக்கிடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து சோப்புத் தண்ணீர் குடித்ததால், 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
குஜராத் மாநிலம் வதோதரா மத்தியச் சிறையில் கைதிகளுக்கிடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து சோப்புத் தண்ணீர் குடித்ததால், 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
பல்வேறு குற்ற வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ள விசாரணைக் கைதிகள் புதன்கிழமை மாலை நடைபெற்ற இந்தச் சம்பவத்தின் போது சிறைக் காவலரையும் தாக்கியதாகத் தெரிவித்தனர்.
காவல்துறை துணை ஆணையர் (மண்டலம் 2) அபய் சோனி கூறுகையில்,
குஜராத் பயங்கரவாதக் கட்டுப்பாடு மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் விசாரணைக் கைதிகள் வெளியிலிருந்து உணவைப் பெற அனுமதிக்கப்படுவதில்லை. மற்றவர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.
வெளி உணவுக்கு அனுமதிக்கப்படாதவர்கள் மற்ற விசாரணைக் கைதிகளின் உணவை எடுத்துக்கொள்வதால் அவர்களுக்கிடையே மோதல் வெடித்தது. இந்த மோதலில், ஏழு கைதிகள் சோப்பைத் தண்ணீரில் கலந்து உட்கொண்டனர். விசாரணைக் கைதிகள் சிறைக் காவலரையும் தாக்கினர், அதைத் தொடர்ந்து அவர்கள் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சோப்புத் தண்ணீரைக் குடித்த ஏழு பேரும் புதன்கிழமை இரவு வதோதராவில் உள்ள எஸ்எஸ்ஜி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அவர்களின் உடல்நிலை சீராக உள்ளது, அவர்கள் குணமடைந்து வருகின்றனர் என்றார் சோனி.