இந்தியா

ஹிஜாப் வழக்கில் விசாரணை முடிந்தது: தீர்ப்பு ஒத்திவைப்பு!

கர்நாடகத்தில் ஹிஜாப் தடைக்கு எதிரான வழக்கில் விசாரணை முடிவடைந்த நிலையில் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது உச்சநீதிமன்றம். 

DIN

கர்நாடகத்தில் ஹிஜாப் தடைக்கு எதிரான வழக்கில் விசாரணை முடிவடைந்த நிலையில் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது உச்சநீதிமன்றம். 

கா்நாடக மாநிலம் உடுப்பி பள்ளியில் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளுக்கு எதிராகத் தொடங்கிய போராட்டம் மாநிலம் முழுவதும் பரவியதால், ஹிஜாபுக்கு அந்த மாநில அரசு கடந்த பிப்ரவரி 5-ஆம் தேதி தடை விதித்து உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த கா்நாடக உயா்நீதிமன்றம், ஹிஜாப் அணிவது மத ரீதியாக அடிப்படை உரிமை இல்லை என்று கூறி, மாா்ச் 15-ஆம் தேதி உத்தரவிட்டது.

கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட 24 மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, சுதான்ஷு தூலியா ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக நடைபெற்றது. 

இந்நிலையில் இந்த வழக்கில் விசாரணை அனைத்தும் முடிவடைந்த நிலையில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

இந்த வழக்கில் கடந்த 10 நாள்களாக உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்து விசாரணை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நடிகர் ரோபோ சங்கர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!

மும்பையில் பிரபல பள்ளியில் 4 வயது குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை: பெண் ஊழியர் கைது

போதைப்பொருள் கடத்தல் நாடுகள் பட்டியலில் இந்தியா! டிரம்ப் அறிவிப்பு!

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது!

புர்ஜ் கலிஃபாவில் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து!

SCROLL FOR NEXT