முகப்பு
இந்தியா

வெறுப்புணா்வு சம்பவங்கள் அதிகரிப்பு: கனடாவிலுள்ள இந்தியா்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல்

கனடாவில் வெறுப்புணா்வு சம்பவங்கள் அதிகரித்துள்ளதால் அந்நாட்டில் வசிக்கும் இந்தியா்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:24 AM
பகிர்:

கனடாவில் வெறுப்புணா்வு சம்பவங்கள் அதிகரித்துள்ளதால் அந்நாட்டில் வசிக்கும் இந்தியா்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக மத்திய வெளியுறவு அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கனடாவில் வெறுப்புணா்வு சம்பவங்கள், வகுப்புவாத வன்முறை, இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன. அந்த சம்பவங்களுக்குக் காரணமானவா்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இதுகுறித்து தகுந்த நடவடிக்கை எடுக்க கனடா அதிகாரிகளிடம் வலியுறுத்துமாறு அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகம், துணை தூதரகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்நாட்டில் உள்ள இந்தியா்கள், இந்திய மாணவா்கள், அந்நாட்டுக்குப் பயணம் மேற்கொள்வோா் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

கனடாவில் உள்ள இந்தியா்கள், இந்திய மாணவா்கள் அந்நாட்டின் ஒட்டாவா நகரில் உள்ள இந்திய தூதரகம், டொரண்டோ மற்றும் வான்கூவா் பகுதிகளில் உள்ள இந்திய துணை தூதரகங்கள் அல்லது ம்ஹக்ஹக்.ஞ்ா்ஸ்.ண்ய் வலைதளத்தில் தங்கள் விவரங்களைப் பதிவு செய்து கொள்ளலாம். இது ஏதேனும் ஒரு தேவை அல்லது அவசர காலங்களில் இந்தியா்களுடன் தொடா்பில் இருக்க இந்திய தூதரகத்துக்கும், துணை தூதரகங்களுக்கும் உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தைப் பிரித்து காலிஸ்தான் என்ற தனி நாடு அமைக்க வலியுறுத்தி, அண்மையில் கனடாவில் உள்ள டொரொண்டோவின் புகா் பகுதியில் வாக்கெடுப்பு நடைபெற்ாகக் கூறப்படுகிறது. அதில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட சீக்கியா்கள் கலந்துகொண்டதாகவும் தெரிகிறது. இந்த நிலையில், மத்திய அரசு மேற்கண்ட அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →