இந்தியா

தாணேவில் பள்ளியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து விபத்து!

மகாராஷ்டிர மாநிலம் தாணே நகரில் உள்ள குடிமைப் பள்ளியின் வளாகச் சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. 

DIN

மகாராஷ்டிர மாநிலம் தாணே நகரில் உள்ள குடிமைப் பள்ளியின் வளாகச் சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. 

இன்று காலை 9.30 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக தாணே மாநகராட்சி பிராந்திய பேரிடர் மேலாண்மை பிரிவுத் தலைவர் அவினாஷ் சாவந்த் கூறினார்.

தின்யான் சாதனா கல்லூரிக்கு அருகிலுள்ள பரப் வாடியில் அமைந்துள்ள மாநகராட்சி பள்ளியின் பாதுகாப்புச் சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. 

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குத் தீயணைப்பு படை வீரர்கள் மற்றும் ஆர்டிஎம்சி பணியாளர்கள் விரைந்து வந்து தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். 

இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லி அரசுக்கு எதிராக அணிதிரண்ட பெற்றோர்கள்: சட்டப்பேரவை முற்றுகை போராட்டம்!

கூலி படத்தில் சாட்ஜிபிடி உதவியால் பாடலை முடித்த அனிருத்!

பார்வை போதும்... ஃபெளசி!

அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து வெளியேற ரஷியா முடிவு?

விழியிரண்டும்... ராஷி சிங்!

SCROLL FOR NEXT