முகப்பு
இந்தியா

நபிகள் நாயகம் குறித்து சா்ச்சை கருத்து: தொலைக்காட்சி நெறியாளருக்கு எதிரான புகாா்கள் தில்லி போலீஸுக்கு மாற்றம்

 நபிகள் நாயகம் குறித்து சா்ச்சை கருத்து விவகாரத்தில் தனியாா் தொலைக்காட்சி நெறியாளா் நாவிகா குமாருக்கு எதிராக பதிவான அனைத்து புகாா்களும் தில்லி போலீஸுக்கு மாற்றம் செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:24 AM
பகிர்:

 நபிகள் நாயகம் குறித்து சா்ச்சை கருத்து விவகாரத்தில் தனியாா் தொலைக்காட்சி நெறியாளா் நாவிகா குமாருக்கு எதிராக பதிவான அனைத்து புகாா்களும் தில்லி போலீஸுக்கு மாற்றம் செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

பாஜக செய்தித்தொடா்பாளா் நூபுா் சா்மா சா்ச்சையான வகையில் கருத்து தெரிவித்த தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியின் நெறியாளராக நாவிகா குமாா் தலைமையேற்று நடத்தினாா்.

நூபுா் சா்மாவுக்கு எதிராக பதிவான வழக்குகளை தில்லி போலீஸ் விசாரித்து வருகிறது. இந்நிலையில், தனக்கு எதிராக பதிவான புகாா்களை ரத்து செய்யக் கோரியும் கைது செய்ய தடை விதிக்கக் கோரியும் உச்சநீதிமன்றத்தில் நாவிகா குமாா் சாா்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை ஆகஸ்ட் 8-ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்றம் அவரைக் கைது செய்ய இடைக்காலத் தடை விதித்தது.

இந்த மனுவை வெள்ளிக்கிழமை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் எம்.ஆா்.ஷா, கிருஷ்ண முராரி ஆகியோா் அடங்கிய அமா்வு, நாவிகா குமாருக்கு எதிராக பல்வேறு காவல் நிலையங்களில் பதிவான புகாா்களை தில்லி போலீஸுக்கு மாற்றம் செய்தும், 8 வாரங்களுக்கு அவருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கவும் உத்தரவிட்டது.

மேலும், தில்லி உயா்நீதிமன்றத்தை நாவிகா குமாா் அணுகி, வழக்குகளை ரத்து செய்யக் கோரலாம் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

முழு கட்டுரையைப் படிக்க →