இந்தியா

விமானப் படை கல்லூரி மாணவர் கொலை: 6 ஊழியர்கள் கைது

DIN

பெங்களூரு: கர்நாடக மாநிலம் ஜலாஹள்ளி பகுதியில் இயங்கி வரும் விமானப் படை தொழில்நுட்பக் கல்லூரியில் பயிற்சி பெற்று வந்த 27 வயது மாணவர் மரண வழக்கில், கல்லூரியின் ஆறு ஊழியர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த புதன்கிழமை கல்லூரி விடுதி வளாகத்தில் தற்கொலை செய்துகொண்ட நிலையில் அங்கித் குமார் ஜாவின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஆறு பேரும் ஏர் கமாண்டர், குரூப் காப்டன் மற்றும் விங் கமாண்டர் பொறுப்புகளில் இருப்பவர்கள்.

பலியான அங்கித் குமாரின் சகோதரர் அமன் ஜா அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், கொல்லப்பட்டவர் கைப்பட எழுதிய ஏழு பக்க தற்கொலை கடிதத்தையும் கைப்பற்றியுள்ளனர். அதில், கைது செய்யப்பட்ட ஆறு குற்றவாளிகளின் பெயர்களும் இடம்பெற்றுள்ளது.

அங்கித்துக்கு எதிராக பயிற்சி அதிகாரி உள்பட சிலர் எடுத்த நடவடிக்கைகள் காரணமாக மன உளைச்சலுக்கு ஆளான அங்கித் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

தற்கொலையாக இருந்தாலும், கல்லூரி நிர்வாகத்திடம் இருந்து பெற்றோருக்கு எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. தொடர்ச்சியாக செல்லிடப்பேசி அழைப்புகளை அங்கித் எடுக்காததால், குடும்பத்தினர் கல்லூரி விடுதிக்கு வந்து பார்த்தபோது, அவர் தற்கொலை செய்து கொண்டதாக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

அங்கித் தனது கைப்பட எழுதிய தற்கொலைக் கடிதத்தில், குற்றம்சாட்டப்பட்ட ஆறு பேரும் தன்னை எந்த வகையில் எல்லாம் துன்புறுத்தினார்கள், மன உளைச்சலுக்கு ஆளாக்கினர் என்பதை தெள்ளத் தெளிவாக எழுதியிருப்பதாகவும் இளைஞரின் உறவினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு, தனது சகோதரனுக்கு அனுப்பிய குறுந்தகவலில் ஏதேதோ ஆவணங்களைக் காட்டி அதில் கையெழுத்திடச் சொல்கிறார்கள் என்று அனுப்பியிருந்ததையும் காவல்துறையினர் கவனத்தில் எடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விராட் கோலி, ரஜத் படிதார் அதிரடி; பஞ்சாப் கிங்ஸுக்கு 242 ரன்கள் இலக்கு!

இஸ்ரேல் டிரோன் தாக்குதல்: லெபனானில் 4 பேர் பலி!

டி20 உலகக் கோப்பைக்கான இலங்கை அணி அறிவிப்பு!

சிவகாசி பட்டாசு ஆலை விபத்து: பலி எண்ணிகை 10ஆக உயர்வு

ராகுலுக்கும், மோடிக்கும்தான் நேரடிப் போட்டி: அமித் ஷா

SCROLL FOR NEXT