ஹிமந்தா பிஸ்வா சர்மா 
இந்தியா

அசாமில் சிந்தன் ஷிவிர் 3  நாள் ஆலோசனைக் கூட்டம் இன்று தொடக்கம்!

அசாம் மாநிலத்தில் சிந்தன் ஷிவிர் மூன்று நாள் ஆலோசனைக் கூட்டம் இன்று தொடங்குகிறது. 

DIN

அசாம் மாநிலத்தில் சிந்தன் ஷிவிர் மூன்று நாள் ஆலோசனைக் கூட்டம் இன்று தொடங்குகிறது. 

ஆலோசனைக் கூட்டத்தில் அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, அனைத்து அமைச்சர்கள் மற்றும் மாநில அரசின் பல்வேறு துறைகளின் மூத்த செயலாளர்கள் ஆகிய அனைவரும் கலந்து கொள்கிறார்கள். 

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மாநில அரசு துறைகளின் செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்படும். அடுத்த ஐந்தாண்டுகளுக்கான துறைகளின் திட்டங்கள் மற்றும் சாலை வரைபடம் ஆகியவை சிவிரில் தயாரிக்கப்படும்.

வாழும் கலையைச் சேர்ந்த ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் மற்றும் சத்குரு, பல்வேறு மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள், சிந்தன் ஷிவிரில் பங்கேற்கின்றனர்.

சத்குரு இன்று சிந்தன் ஷிவிர் நிகழ்ச்சியில் பங்கேற்பார், வாழும் கலையின் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் செப்டம்பர் 25 அன்று பங்கேற்கிறார்.

இந்தாண்டு ஆகஸ்ட் மாதம் முதல்வர் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் மூன்று நாள் சிவிர் விழா நடத்த முடிவு செய்யப்பட்டது. 

அசாம் முதல்வர் டாக்டர் ஹிமந்தா பிஸ்வா சர்மா மதியம் 2 மணியவில் சிந்தன் ஷிவிரின் தொடக்க விழாவில் கலந்துகொள்கிறார். 

அனைத்து அமைச்சர்கள், பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் எம்எல்ஏக்கள் சிந்தன் ஷிவிரில் கலந்துகொள்கின்றனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2கே கேர்ள்... அனுஷ்கா!

ராமரை காணச் செல்கிறேன்:செங்ககோட்டையன்! | செய்திகள்: சில வரிகளில் | 08.09.25 |Sengottaiyan | MKStalin

சந்திர கிரகணம் - புகைப்படங்கள்

அழகான ராட்சஷி... ஜாக்குலின்!

அடுத்த 3 மணிநேரத்துக்கு 8 மாவட்டங்களில் மழை!

SCROLL FOR NEXT