இந்தியா

குஜராத்தில் ஆட்டோ உதிரிபாகங்கள் கிடங்கில் பயங்கர தீ

குஜராத்தின் வதோதரா மாவட்டத்தில் ஹாலோல் சாலை அருகே உள்ள ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் கிடங்கில் வியாழக்கிழமை இரவு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.

DIN

வதோதரா (குஜராத்): குஜராத்தின் வதோதரா மாவட்டத்தில் ஹாலோல் சாலை அருகே உள்ள ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் கிடங்கில் வியாழக்கிழமை இரவு பெரும் தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்கும் பணியில் 11 தீயணைப்பு வாகனங்களூடன் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். 

குஜராத் மாநிலம், வதோரா மாவட்டத்தில் "ஹாலோல் சாலைக்கு அருகில் உள்ள ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் கிடங்கில் வியாழக்கிழமை இரவு திடீரென பெரும் தீ விபத்து ஏற்பட்டது.  

இதுகுறித்து தகவல் அறிந்து 11 தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்து வந்து தீயணைப்பு வீரர்கள் மற்றும் அங்கு 56க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தீயைகட்டுக்குள் கொண்டுவர போராடி வருகின்றனர். 

தீ விபத்தில் கிடங்கில் உள்ள டயர்கள் மற்றும் எண்ணெய் போன்ற இரு சக்கர வாகன உதிரி பாகங்கள் அதிகயளவில் எரிந்து வருவதால் அந்த பகுதி முழுவதும் புகைமண்டலமாக காட்சியளிக்கிறது. 

இந்த தீ விபத்தில் இதுவரை எந்த உயிர்சேதமும் ஏற்படவில்லை என்று தலைமை தீயணைப்பு அதிகாரி பார்த் பிரம்பட் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்து - புகைப்படங்கள்

ஆசியக் கோப்பை மோதல்: சூர்யா, பும்ராவுக்கு அபராதம்! ரௌஃப் 2 போட்டிகளில் விளையாட தடை!

2-ஆம் கட்ட SIR பணிகள்! கவனிக்க வேண்டியவை என்னென்ன?

வடகிழக்கு மாநிலங்களை ஒருங்கிணைக்கும் புதிய முயற்சி!

தில்லியில் காற்றின் தரம் கடந்த 7 ஆண்டுகளைவிட மேம்பட்டுள்ளது: அரசு அறிக்கை வெளியீடு

SCROLL FOR NEXT