இந்தியா

மலப்புரத்தில் ராகுல் காந்தி! 21-வது நாள் நடைப்பயணம்

DIN

கேரள மாநிலம், மலப்புரத்தில் தனது 21-வது நாள் நடைப்பயணத்தை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி இன்று மேற்கொண்டு வருகிறார்.

மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எதிராக மக்களை ஒன்றுதிரட்டும் நோக்கில் ‘பாரத் ஜோடோ’ நடைப்பயணத்தை காங்கிரஸ் நடத்தி வருகிறது. அக்கட்சி எம்.பி. ராகுல் காந்தி நடைப்பயணத்தை முன்னின்று நடத்தி, செல்லும் இடங்களில் மக்களைச் சந்தித்து வருகிறாா். தமிழகத்தில் நிறைவடைந்த நடைப்பயணம், தற்போது கேரளத்தில் நடைபெற்று வருகிறது.

கேரளத்தில் நடைப்பயணம் மேற்கொண்டு வரும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, மலப்புரம் மாவட்டம் பண்டிக்காடு பகுதியிலிருந்து இன்று காலை 6.30 மணியளவில் இன்றைய நடைப்பயணத்தை தொடர்ந்தார்.

காலை 11  மணிக்கு வண்டூர் சந்திப்பில் ஓய்வெடுக்கும் ராகுல் காந்தி, மீண்டும் மாலை 5 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு இரவு 7 மணிக்கு நிலம்பூரில் இன்றைய பயணத்தை முடிக்கின்றனர்.

மொத்தம் 150 நாள்கள் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை 3,600 கி.மீ. நடைப்பயணம் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இளம்பருவத்தினர் இணையவழி குற்றங்களில் ஈடுபடாமல் தடுக்க சர்வதேச ஒத்துழைப்பு தேவை -தலைமை நீதிபதி

'ஜெயக்குமார் தனசிங் காலமான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்'

அரண்மனை - 4 முதல்நாள் வசூல்!

‘டாக்ஸிக்’ படத்தில் கரீனாவுக்கு பதிலாக நயன்தாரா?

ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி மும்பை வீரர் சாதனை!

SCROLL FOR NEXT