முதல்வா் அசோக் கெலாட் (கோப்புப்படம்) 
இந்தியா

'முதல்வர் பதவியை கெலாட் ராஜிநாமா செய்யமாட்டார்' - ராஜஸ்தான் அமைச்சர்

ராஜஸ்தான் முதல்வர் பதவியை அசோக் கெலாட் ராஜிநாமா செய்யமாட்டார் என மாநில மூத்த அமைச்சர் பிரதாப் சிங் கச்சாரியாவாஸ் தெரிவித்தார்.

DIN

ராஜஸ்தான் முதல்வர் பதவியை அசோக் கெலாட் ராஜிநாமா செய்யமாட்டார் என மாநில மூத்த அமைச்சர் பிரதாப் சிங் கச்சாரியாவாஸ் தெரிவித்தார்.

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதால் கட்சியின் விதிப்படி முதல்வர் பதவியை ராஜிநாமா செய்ய வேண்டிய சூழல் நிலவுகிறது. மாநில துணை முதல்வராகவுள்ள சச்சின் பைலட் முதல்வர் பதவியை அடைய தீவிரம் காட்டி வருகிறார். 

ஆனால், சச்சின் பைலட் முதல்வாரவதற்கு கெலாட் ஆதரவு எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கெலாட்டும் முதல்வர் பதவியை கைவிட மறுத்து வருகிறார். எனினும் கட்சித் தலைமை இதுகுறித்து முடிவெடுக்கட்டும் என்று தெரிவித்தார். 

இந்நிலையில், அசோக் கெலாட் இன்று மாலை சோனியா காந்தியை சந்தித்துப் பேசுகிறார். 

இதற்கு முன்னதாக ராஜஸ்தானில் தனது ஆதரவு எம்எல்ஏக்களை கெலாட் சந்தித்துப் பேசியுள்ளார். 

ராஜஸ்தான் முதல்வர் பதவியை கைவிட வாய்ப்பில்லை என்று கூறியதாக அவரது ஆதரவாளர்கள் கூறியுள்ளார். 

'அசோக் கெலாட்டின் தலைமையில் காங்கிரஸ் செயல்படும். அவர் இன்றும் சரி, எதிர்காலத்திலும் சரி ராஜிநாமா செய்யமாட்டார்' என்று அமைச்சர் பிரதாப் சிங் கச்சாரியாவாஸ் கூறினார்.

கெலாட் ராஜஸ்தானில் தனது ஐந்தாண்டுகளை நிறைவு செய்வார் என மற்றொரு அமைச்சரான விஸ்வேந்திர சிங் தெரிவித்தார்.

ராஜஸ்தான் முதல்வர் பதவியில் இருந்து விலக மாட்டேன், கட்சித் தலைவர் பதவியிலும் போட்டியிடுவேன் என்ற நிலைப்பாட்டிலேயே கெலாட் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

எனினும் சோனியா காந்தியுடன் இன்றைய சந்திப்புக்குப் பிறகே முடிவு தெரிய வரும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதீப் ரங்கநாதனின் டூட் படத்தின் முதல் பாடல்!

தருமபுரி திமுக முன்னாள் எம்எல்ஏ ஆா்.சின்னச்சாமி மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

தருமபுரி திமுக முன்னாள் எம்எல்ஏ ஆா்.சின்னச்சாமி காலமானாா்!

நாகை மாவட்டத்துக்கு செப். 8-ஆம் தேதி உள்ளூா் விடுமுறை அறிவிப்பு

பிகார் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 65 லட்சம் பேரும் ஏழைகள்: ராகுல்!

SCROLL FOR NEXT