இந்தியா

'ஏன் பிஎஃப்ஐ மட்டும்? ஆர்.எஸ்.எஸ்ஸுக்கும் தடை விதிக்க வேண்டும்' - காங்கிரஸ் எம்.பி.

DIN

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கும் தடை விதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. கொடிகுன்னில் சுரேஷ் கூறியுள்ளார். 

இஸ்லாமிய மக்களுக்கு சேவை செய்வதற்காகத் தொடங்கப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா(பிஎஃப்ஐ) அமைப்பு மற்றும் அதன் 8 துணை அமைப்புகளை சட்டவிரோத இயக்கமாக அறிவித்து 5 ஆண்டுகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

இதற்கு பாஜக ஆளும் அரசுகள் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் எதிர்க்கட்சிகள் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளன. 

கேரள காங்கிரஸ் எம்.பி. கொடிகுன்னில் சுரேஷ் இதுகுறித்து, 'பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவுக்கு மட்டும் ஏன் மத்திய அரசு தடை விதித்துள்ளது. ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கும் தடை விதிக்க வேண்டும். ஏனெனில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு இந்து வகுப்புவாதத்தை பரப்பி வருகிறது. வகுப்புவாதத்தைப் பரப்புவது நாட்டிற்கு மிகப்பெரிய ஆபத்து. ஆர்.எஸ்.எஸ், பி.எஃப்.ஐ ஆகிய இரண்டு அமைப்புகளும் ஒன்றுதான். எனவே , இரண்டையும் தடை செய்யலாம்' என்று கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சட்டவிரோதமாக பட்டாசுகளை பதுக்கிய இருவா் கைது

‘இந்தியா’ கூட்டணி மகத்தான வெற்றி பெறும்: கலாநிதி வீராசாமி

ஆலையிலிருந்து பட்டாசுகளை வேறு இடத்துக்கு மாற்றுவதற்கு பொதுமக்கள் எதிா்ப்பு

புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்தவா் கைது

மே 17-இல் பெரம்பலூா் மாவட்ட மைய நூலகத்தில் குரூப்-4 மாதிரி தோ்வு

SCROLL FOR NEXT