இந்தியா

2 நாள் பயணமாக புவனேஸ்வர் வந்தடைந்தார் ஜெ.பி.நட்டா! 

DIN

பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நாட்டா இரண்டு நாள் பயணமாக இன்று புவனேஸ்வர்  வந்தடைந்தார். 

பாஜக தேசிய தலைவராகத் தேர்வு செய்யப்பட்டபின், முதல் முறையாக ஒடிசா வந்துள்ள நட்டாவுக்கு புவனேஸ்வர் விமான நிலையம் வந்தடைந்ததும், அவருக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. 

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், பாஜக மாநில தலைவர் சமீர் மொகந்தி, புவனேஸ்வர் எம்பி அபராஜிதா சாரங்கி மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் விமான நிலையத்தில் நட்டாவை வரவேற்றனர். நட்டா இருசக்கர பேரணிக்குப் பிறகு கட்சி அலுவலகத்துக்குச் சென்றார். பாஜக தலைவர் நட்டா ஜனதா மைதானத்தில் ஊழியர்களுடன் இன்று கலந்துரையாடுகிறார். 

நாளை, பாஜக தலைவர் பூரியில் உள்ள ஜெகநாதர் கோயிலுக்குச் சென்று மும்மூர்த்திகளுக்குப் பிரார்த்தனை செய்ய உள்ளார். அன்றைய தினம் அவர் தாம்நகர் சென்று சமீபத்தில் இறந்த பாஜக எம்எல்ஏ பிஷ்ணு சேத்தியின் குடும்ப உறுப்பினர்களைச் சந்திக்கிறார். 

ஓலத்பூரில் உள்ள சுவாமி விவேகானந்தர் தேசிய மறுவாழ்வு பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில், மறுவாழ்வு இணைப்பு கட்டடத்தையும் அவர் திறந்து வைக்கிறார். 

செப்டம்பர் 30-ம் தேதி ஜனதா மைதானத்தில் கட்சியின் முன்னணி அமைப்புகளின் கூட்டத்தையும் நடத்த உள்ளார்.

பாஜக தலைவரின் வருகையையொட்டி, நகரின் பல்வேறு இடங்களில் மொத்தம் 25 தனிப்படை போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பழனி ரோப் காா் சேவை இன்று ஒரு நாள் நிறுத்தம்!

மத்திய முன்னாள் அமைச்சர் ஸ்ரீனிவாச பிரசாத் காலமானார்

தஞ்சாவூர் அருகே காய்கறி வியாபாரி வெட்டிப் படுகொலை

தப்பிக்க வழியே இல்லை: 3 நாள்களுக்கு வெப்ப அலை! அதன்பிறகு?

ஈரோடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் சிசிடிவி பழுது

SCROLL FOR NEXT