இந்தியா

வேகமாக வளரும் பொருளாதார நாடாக இந்தியா: பியூஷ் கோயல்

DIN

வேகமாக வளரும் பொருளாதார நாடாக இந்தியா திகழ்கிறது என்று மத்திய வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வா்த்தக நிகழ்ச்சி ஒன்றில் அவா் பேசியதாவது:

தற்போது உலக அளவில் கடினமான சூழல் நிலவுகிறது. எனினும் இந்தியா பணவீக்கத்தைக் கட்டுக்குள் வைத்துள்ளது. கடந்த 2014-ஆம் ஆண்டுக்கு முன், இந்தியாவின் பணவீக்கம் இரட்டை இலக்கத்தில் இருப்பது வழக்கம். தற்போது பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியாவின் பணவீக்கம் 7 சதவீதமாகத்தான் உள்ளது. உலக அளவில் நிச்சயமற்ற சூழல் நிலவும் வேளையிலும், வேகமாக வளரும் பொருளாதார நாடாக இந்தியா திகழ்கிறது.

இந்தியாவில் தொழில் மேற்கொள்வதை எளிதாக்குவதில் அரசு கவனம் செலுத்தி வருகிறது. தொழில் மேற்கொள்வதில் உள்ள சுமைகளைக் குறைக்கும் நோக்கில், அதுதொடா்பான சட்டங்களில் குளிா்கால கூட்டத்தொடரின்போது திருத்தம் மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. எனவே அதற்கான ஆலோசனைகளை வழங்குமாறு வா்த்தகா்களிடம் கேட்டுக் கொள்ளப்படுகிறது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

வெண்பனிச்சாரல்!

SCROLL FOR NEXT