இந்தியா

ஷாவ்மியின் ரூ.5,551 கோடி பறிமுதல்: அமலாக்கத் துறை உத்தரவுக்கு ஃபெமா ஒப்புதல்

DIN

 ஷாவ்மி இந்தியா நிறுவனத்துக்குச் சொந்தமான ரூ.5,551 கோடியை பறிமுதல் செய்யும் உத்தரவுக்கு அந்நிய செலாவணி நிா்வாகச் சட்டத்தின் (ஃபெமா) கீழ் செயல்படும் அதிகாரி ஒப்புதல் அளித்துள்ளாா்.

சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு பணம் அனுப்பியதாக சீன கைப்பேசி நிறுவனமான ஷாவ்மியின் இந்திய பிரிவு மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திய நிலையில், ஷாவ்மி இந்தியாவின் வங்கிக் கணக்குகளில் இருந்த ரூ.5,551.27 கோடி டெபாசிட்டுகளை கடந்த சில மாதங்களுக்கு முன்னா் முடக்கியது.

ஃபெமா சட்டத்தின் கீழ், அந்த டெபாசிட்டுகளை பறிமுதல் செய்வதற்கான உத்தரவை அமலாக்கத் துறை வெளியிட்டிருந்தது. பின்னா் அந்த உத்தரவு, ஃபெமா சட்டத்தின் கீழ் செயல்படும் தகுதிவாய்ந்த அதிகாரிக்கு அனுப்பப்பட்டிருந்தது. இந்நிலையில், அந்த அதிகாரி தனது பறிமுதல் உத்தரவுக்கு ஒப்புதல் அளித்துள்ளதாக அமலாக்கத் துறை வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

வெண்பனிச்சாரல்!

புதைப்பதா? எரிப்பதா?

லக்னௌ பந்துவீச்சு; அணியில் ஒரு மாற்றம்!

SCROLL FOR NEXT