முகப்பு
இந்தியா

அசாமில் புயல், கனமழையால் 20 பேர் பலி

அசாமில் கனமழை மற்றும் புயல் காரணமாக 20 பேர் உயிரிழந்துள்ளனர். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:00 AM
பகிர்:

அசாமில் கனமழை மற்றும் புயல் காரணமாக 20 பேர் உயிரிழந்துள்ளனர். 

அசாமில் புயல் காரணமாக கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து அங்கு மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். 

மார்ச் மாத இறுதியில் இருந்து அசாம் முழுவதும் கடுமையான புயல் மற்றும் கனமழை காரணமாக குறைந்தது 20 பேர் உயிரிழந்துள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. 

அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் தலைமை செயல் அதிகாரி ஜி.டி.திரிபாதி கூறுகையில்,  தரவுகளின்படி கடந்த மூன்று நாள்களில் 22 மாவட்டங்களில் 80 வருவாய் வட்டங்களில் புயல் மற்றும் கனமழையால் ஏற்பட்ட மின்னலால் உயிர்ப்பலி பதிவாகியுள்ளது. அதில் மொத்தம் 20 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களுக்கு மாநில அரசு சார்பில் நிவாரணம் வழங்கப்படுகிறது. கனமழை மற்றும் புயலினால் 1,410 கிராமங்களில் 95,239 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஆயிரக்கணக்கான வீடுகளும் சேதமடைந்துள்ளன என்றார். 

அதுபோல மொத்தம் 1,333 ஏக்கர் விளைநிலங்கள் சேதமாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகங்கள் தகவல் தெரிவித்துள்ளன. 

புயல் காரணமாக பல்வேறு பகுதிகளில் மீட்புப் பணிகள் முடக்கிவிடப்பட்டுள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.