முகப்பு
இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப்படையினர் நடத்திய தாக்குதலில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:04 AM
பகிர்:

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப்படையினர் நடத்திய தாக்குதலில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். 

ஜம்மு-காஷ்மீர், குல்காம் மாவட்டத்தில் உள்ள மிர்ஹாமா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து அந்தப் பகுதியை சுற்றிவளைத்து பாதுகாப்புப் படையினர் இன்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். 

அப்போது இருத்தரப்பினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. இதில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் பயங்கரவாதிகள் யாரேனும் அப்பகுதியில் பதுங்கியுள்ளார்களா என தொடர்ந்து தேடுதல் வேட்டையில் நடைபெற்று வருகிறது. 

இச்சம்பவத்தால் மிர்ஹாமா பகுதியில் பரபரப்பு நிலவுகிறது. 

முழு கட்டுரையைப் படிக்க →