பிரதமர் மோடியின் தாயார் உடல்நிலையில் முன்னேற்றம்!
பிரதமர் நரேந்திர மோடியின் தாயாரின் உடல்நிலை படிப்படியாக முன்னேற்றம் அடைந்து வருவதாக மோடியின் மூத்த சகோதரர் சோமாபாய் மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் தாயாரின் உடல்நிலை படிப்படியாக முன்னேற்றம் அடைந்து வருவதாக மோடியின் மூத்த சகோதரர் சோமாபாய் மோடி தெரிவித்துள்ளார்.
100 வயதாகும் ஹீராபென் புதன்கிழமை காலை உடல்நலப் பிரச்னைகள் காரணமாக குஜராத்தில் உள்ள யு.என்.மேத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு சிகிச்சைகள் வழங்கப்பட்டது. இன்று காலை முதல் அவரது உடல்நிலை படிப்படியாக முன்னேறி வருவதாகவும், திரவ உணவுகளை எடுத்துக் கொண்டதாகவும் சோமாபாய் மோடி தெரிவித்தார்.
Advertisement
அவருக்கு சிடி ஸ்கேன் மற்றும் எம்ஆர்ஐ பரிசோதனைக்குப் பிறகு மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக மருத்துவமனை அறிக்கையில் தெரிவித்துள்ளது.
புதன்கிழமை பிற்பகல் தில்லியில் இருந்து அகமதாபாத் சென்றடைந்த பிரதமர் மோடி, தனது தாயாரைச் சந்திக்க மருத்துவமனைக்குச் சென்றார். அங்கு ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அவர் மருத்துவமனையில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.