முகப்பு
இந்தியா

நாட்டில் புதிதாக 67,084 பேருக்கு கரோனா; 1,241 பேர் பலி

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 67,084 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Updated On : 10 பிப்ரவரி, 2022 at 9:01 AM
நாட்டில் புதிதாக 67,084 பேருக்கு கரோனா
பகிர்:


இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 67,084 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேர கரோனா பாதிப்பு நிலவரம் குறித்த தரவுகளை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. புதிதாக 67,084 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 1,241 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர். 1,67,882 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 5,06,520 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மொத்தம் 4,11,80,751 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

Advertisement

இன்றைய நிலவரப்படி 7,90,789 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாட்டில் இதுவரை 171.28 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.