முகப்பு
இந்தியா

தில்லி போராட்டத்தில் ராஜஸ்தான் முதல்வர் கைது

தில்லியில் காங்கிரஸ் கட்சியினர் நடத்திய போரட்டத்தில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் இன்று கைது செய்யப்பட்டார்.

Updated On : 21 ஜூலை, 2022 at 1:05 PM
ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்
பகிர்:

தில்லியில் காங்கிரஸ் கட்சியினர் நடத்திய போரட்டத்தில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் இன்று கைது செய்யப்பட்டார்.

நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு மூன்று முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பிய நிலையில், இன்று விசாரணைக்கு ஆஜராகியுள்ளார்.

இந்நிலையில், அமலாக்கத்துறை உள்ளிட்ட அமைப்புகளை மத்திய அரசு தவறாக பயன்படுத்துவதாக கூறி, நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் இன்று போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Advertisement

தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், மூத்த தலைவர் சச்சின் பைலட் உள்ளிட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

முன்னதாக அமலாக்கத்துறை விசாரணைக்கு 5 முறை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி ஆஜரானது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.